கோடிக்கணக்கானோர் கொண்டாடிய யோகா நாள் PM Modi | Maan ki Baath June 2025 | Yoga | Trachoma
கோடிக்கணக்கானோர் கொண்டாடிய யோகா நாள் PM Modi | Maan ki Baath June 2025 | Yoga | Trachoma 123-வது மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். டிராக்கோமா Trachoma என்ற கண் நோய் இல்லாத நாடு இந்தியா என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. கடந்த 21ம் தேதி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகா தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் நமது பாரம்பரியம் முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது. விசாகப்பட்டினத்தில் 3 லட்சம் பேர் கடற்கரையில் யோகா செய்தனர். 2,000 ஆதிவாசி மாணவர்கள் 108 நிமிடங்கள் 108 சூரிய நமஸ்காரம் செய்தனர். தெலங்கானாவில் 3,000 மாற்றுத்திறனாளிகள் யோகா முகாமில் பங்கேற்றனர். நாட்டில் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெறுகின்றனர். இது 2015-ல் 25 கோடியாக மட்டுமே இருந்தது. இப்போது மிக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. மேகாலயாவின் ஏரி பட்டுக்கு Eri silk புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது. இது உலக சந்தையில் புகழ் பெற உதவும் என்று பிரதமர் மோடி பேசினார்.