உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வனபத்ரகாளி ஆசியோடு பிரசாரம் தொடங்கினார் பழனிசாமி | EPS | ADMK | Election 2026

வனபத்ரகாளி ஆசியோடு பிரசாரம் தொடங்கினார் பழனிசாமி | EPS | ADMK | Election 2026

வனபத்ரகாளி ஆசியோடு பிரசாரம் தொடங்கினார் பழனிசாமி | EPS | ADMK | Election 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி உள்ளன. அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசார பயணத்தை துவங்கினார். கோவை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்ததை தொடர்ந்து சுற்றுப்பயணம் ஆரம்பமானது. மேட்டுபாளையத்தில் சுற்றுப்பயணம் தொடங்கிய பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதற்கட்ட சுற்றுப்பயணம் வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. ஜோதிடர்கள் ஆலோசனைப்படி அவரது பிரசார பயணம் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பழனிசாமிக்கு புதன் திசையில் கேது புத்தி நடக்கிறது. அவருடைய ஜாதக ரீதியாக, புதன், கேது இருவருமே சாதகமாக உள்ளனர். ராசிநாதன் புதன் என்பதும், புதனுடைய மிதுன ராசியில், கேது சஞ்சரிக்கிறார் என்பதும், அவரது பிறப்பு ஜாதக அமைப்பு. அதன் காரணமாக, கேதுவின் ஆதிக்க நாளான 7ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார். அந்த தேதியின் கூட்டு எண், புதன் ஆதிக்க எண்ணான 5. இதுபோல், பயணத்தை நிறைவு செய்யும் ஜூலை 21ம் தேதி, குருவின் ஆதிக்க எண். ஒருவருக்கு ராஜயோகத்தை வழங்குபவர் குரு பகவான். எனவே, குருவின் ஆதிக்க எண்ணில், பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அவர் ஜாதகத்தில், கேது, குரு நட்பாக உள்ளனர். கேது புத்தியை தொடர்ந்து, சுக்கிரனும் உச்சமாக இருக்கிறார். சூரியனும் பவுர்ணமி யோகத்தை வழங்குவார் என ஜோதிடர் திருக்கோவிலுார் பரணிதரன் கணித்துள்ளார். இதனால் முழுக்க முழுக்க, ஜாதகத்தை மையமாக வைத்து, ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, பழனிசாமி பிரசார பயணத்தை துவங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை