உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்கே தமிழ் அதிகாரி பெயரை சூட்டிய கேரள மக்கள் | Nellankara | Thrissur

ஊருக்கே தமிழ் அதிகாரி பெயரை சூட்டிய கேரள மக்கள் | Nellankara | Thrissur

ஊருக்கே தமிழ் அதிகாரி பெயரை சூட்டிய கேரள மக்கள் | Nellankara | Thrissur கேரளாவின் திருச்சூர் நெல்லங்கராவில் ரவுடிகளுக்கிடையே அடிக்கடி மோதல் நடக்கும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போலீசில் புகார் கொடுத்தும் பலனில்லை. கடந்த ஜூன் 28ம் தேதியும் வழக்கம் போல ரவுடி கும்பல்கள் மோதிக்கொண்டன. நெல்லங்கரா நகரம் முழுவதும் பதற்றத்தில் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரின் ஜீப்பை ரவுடிகள் அடித்து நொறுக்கினர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ களத்தில் இறங்கினார். கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு ரவுடிகள் சிறப்பாக கவனிக்கப்பட்டனர். ஜூன் 29ம் தேதி காலை நெல்லங்கரா ஆஸ்பிடல் ரவுடிகளால் நிரம்பி இருந்தது. பலரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. கேமராவை பார்த்ததும் கதறினர். போலீசார் எங்கள் கை,கால்களை உடைத்து விட்டனர் என அலறினர். இது குறித்து கேட்டபோது கமிஷனர் இளங்கோ வித்தியாசமான பதில் சொன்னார். ரவுடிகள் குண்டர்கள் போல நடந்து கொண்டனர். அதனால் போலீஸ் போலீஸ் போல நடந்து கொண்டது என்றார். இவரது பேச்சு பெரிய அளவில் மக்களிடையே சென்றடைந்தது. போலீஸ் கமிஷனர் இளங்கோவை அப்பகுதி மக்கள் ஹீரோ போல கொண்டாடினர். ஏனென்றால் கடந்த காலங்களில் இது போன்ற ரவுடிகள் அட்டகாசத்தை போலீசார் கண்டும் காணாமல் இருப்பார்கள். ஆனால் இந்த முறை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஒரேநாளில் அடக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நெல்லங்கரா பகுதி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அங்குள்ள ஒரு பகுதிக்கு இளங்கோ நகர் என கமிஷனர் பெயர் சூட்டினர். இதுதொடர்பாக பெயர் பலகையும் வைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கமிஷனர் இளங்கோ, நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். என்னுடைய பெயரை நீக்கிவிடுங்கள் என அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெயர் பலகையை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தினர். திருச்சூர் ரவுடிகளை தெறிக்கவிட்ட இளங்கோவின் சொந்த ஊர் திண்டுக்கல். 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ