உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு | Tailor Raja sathik | Covai Court | Police Investigation

காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு | Tailor Raja sathik | Covai Court | Police Investigation

காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு | Tailor Raja sathik | Covai Court | Police Investigation கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய நபரான சாதிக் என்ற டெய்லர் ராஜாவை 28 ஆண்டுகளுக்கு பின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கோர்ட் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். போலீசார் நடத்திய விசாரணையில் டெய்லர் ராஜா தயாரித்து கொடுத்த குண்டுகளை தான் கோவையில் பல இடங்களில் வெடிக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். திங்களன்று கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு செய்ய உள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது ; டெய்லர் ராஜா வெடிகுண்டு தயாரிப்பில் திறமையானவன். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே கோவை, மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி சிறை வாடர்ன்களை கொன்றுள்ளான். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல வகையான வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்து உள்ளான். குண்டுகளை எங்கு வைப்பது எப்போது வெடிக்க செய்வது ? உள்ளிட்ட ஆலோசனைகளையும் தனது 20 வயதிலேயே வழங்கி உள்ளான். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பின் டெய்லர் ராஜா தனது பெயரை அடிக்கடி மாற்றி உள்ளான். கடைசியாக கர்நாடகாவில் தலைமுறைவாக இருந்த போது காய்கறி வியாபாரம் செய்து உள்ளான். ராஜா பலமுறை கோவைக்கு வந்து பலரை சந்தித்து விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. அடைக்கலம் கொடுத்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றனர்.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ