ஜார்க்கண்டில் நடந்த ஆய்வில் தில்லாலங்கடி சம்பவம் | Jharkhand | New liquor policy
ஜார்க்கண்டில் நடந்த ஆய்வில் தில்லாலங்கடி சம்பவம் | Jharkhand | New liquor policy
ஜார்க்கண்டில் செப்டம்பர் 1 முதல் புதிய மதுபானக் கொள்கைகள் அமலாக உள்ளது.
புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன.
தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மது பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பது தெரிந்தது.
விசாரித்த போது கடை நடத்தி வருபவர்கள் அளித்த பதிலால் அதிகாரிகளுக்கு தலை சுற்றியது.
பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மது அனைத்தையும் குடித்து விட்டன என அவர்கள் கூறினர்.
இந்த கதையை அதிகாரிகள் நம்பவில்லை. மது விற்ற பணத்தை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஊழலுக்கு துணையாக எலிகள் மீது பலி போடுவது ஜார்க்கண்டில் இது முதல்முறை அல்ல.
போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை என்ற வழக்கில் எலி தின்றுவிட்டதாக போலீசார் இது போல் முன்பு கோர்ட்டில் கூறினர்.
ஏற்க மறுத்த கோர்ட் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது.