உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 25ஐ பிடித்து கூட்டணி ஆட்சிக்கு வியூகம்! | Seeman | NTK | 2026 Elections

25ஐ பிடித்து கூட்டணி ஆட்சிக்கு வியூகம்! | Seeman | NTK | 2026 Elections

25ஐ பிடித்து கூட்டணி ஆட்சிக்கு வியூகம்! | Seeman | NTK | 2026 Elections 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைக்க சீமான் தேர்தல் வியூகம் அமைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இயற்கை வளம், மண், கடல் வளம் சார்ந்த வாழ்வியல் மற்றும் தொழில் செய்யும் மக்களின் ஓட்டுகளை வளைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். முதல் கட்டமாக, பனை மரம் ஏறி கள் இறக்கி, தென்னை, பனை சார்ந்த விவசாயிகளின் ஓட்டுகளை மையப்படுத்தி போராட்டம் நடத்தினார். இரண்டம் கட்டமாக மண், பால் வளம் சார்ந்த தொழில் புரியும் மக்களின் ஓட்டுகளை வளைக்க, மதுரையில் கால்நடைகள் மாநாடு நடத்தினார். ஆகஸ்டு 17ல் 10,000 மரங்களுடன் மாநாடு நடத்தி சீமான் பேச உள்ளார். இதன் அடுத்த கட்டமாக செப்டம்பரில் நடுக்கடலில் மீனவர்களுடன் ஒரு வாரம் பயணித்து, மீன் பிடித்து மீனவர்கள் மாநாடு நடத்த சீமான் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின் திமுகவுக்கும், சீமான் கட்சிக்கும், மீனவர்களின் ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. லோக்சபா தேர்தலில், மீனவ சமுதாயத்தினர் அடர்த்தியாக வசிக்கும் தொகுதிகளில் திமுகவினருக்கு 55, நாம் தமிழர் கட்சிக்கு 25 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி உட்பட 13 கடலோர மாவட்டங்களில் மீனவர்களின் ஓட்டுகள் உள்ளது. தவெக தலைவர் விஜய், மீனவர்களின் நலனுக்காக சில படங்களில் நடித்து உள்ளார். எனவே தன் கட்சிக்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டுகளை தக்க வைக்க மீனவர்கள் மாநாட்டை சீமான் நடத்த உள்ளார். துாத்துக்குடி கடலிலிருந்து ராமேஸ்வரம் வரை ஒரு வாரம் நடுக்கடலில் மீன் பிடிக்கிறார். கரையில் இறங்கிய பின் மீனவ கிராமங்களில் அவர்களின் வீடுகளில் தங்கி சாப்பிடுகிறார். பின் ராமேஸ்வரத்தில் மாநாடு நடத்த உள்ளார். மாநாட்டில் மீனவர்களின் பாரம்பரிய உடை, தோளில் வலையுடன் நின்று பேச திட்டமிட்டுள்ளார் என்றனர்.

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை