விமானம் விழுந்த இடத்தில் சிக்கிய மாணவர்கள் | airforce aircraft crashes | college building | dhaka |
விமானம் விழுந்த இடத்தில் சிக்கிய மாணவர்கள் | airforce aircraft crashes | college building | dhaka | bangladesh | நமது பக்கத்து நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாரா பகுதியில் அந்நாட்டின் விமானப்படை விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சீன தயாரிப்பான இந்த F7 ஜெட் விமானம், மதியம் 1.30 மணி அளவில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த இடம் அங்குள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகம் என்பது தெரியவந்துள்ளது. வகுப்பறை கட்டடத்தின் மீது விமானம் விழுந்த வேகத்தில் தீ பிடித்தது. அந்த இடம் முழுதும் கரும்புகை சூழ்ந்தது. சத்தம் கேட்டதும் கல்லூரியில் இருந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பதறி அடித்து வெளியே ஓடி வந்தனர். விமானம் விழுந்த இடத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அங்கு வந்த ராணுவத்தினரும், மீட்பு படையினரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆம்புலன்ஸ் எதுவும் அருகில் இல்லாததால் காயமடைந்த மாணவர்களை ராணுவ வீரர்கள் தோல்களில் சுமந்து சென்று, ரிக்ஷா வேன் உள்ளிட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் இதுவரை ஒருவர் இறந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்தை உறுதி செய்துள்ள வங்கதேச விமானப்படை, அதற்கான காரணத்தையோ, பைலட் நிலை குறித்தோ எந்த தகவலும் வெளியிடவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். இது நாட்டிற்கு மிகவும் துக்கமான தருணம். விமான விபத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் விபத்துக்குள்ளான 2வது சீன தயாரிப்பு F-7 விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனில் தான் மியான்மர் விமானப்படையின் F-7 போர் விமானம், சகாயிங் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பைலட் பலியானார்.