வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பேசாம பட்டாசு ஆலைகளை மூடுங்க மக்களுக்கு வேற தொழில் ஏற்பாடு பண்ணுங்க நான் தீபாவளி கொண்டாடுபவன்தான் பட்டாசு வெடிக்க ஆர்வமுள்ளவன்தான் ஆனால் இந்த இழப்புகள் தேவையற்றவை இதனால பயனும் இல்லை
சிவகாசியில் இன்னும் அடங்காத துயரம்! | Sivakasi cracker factory | Investigation
சிவகாசியில் இன்னும் அடங்காத துயரம்! | Sivakasi cracker factory | Investigation சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மாலை 4 மணி அளவில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி வானுயர புகை கிளம்பியது. தொழிலாளர்கள் பதறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. 3 அறைகள் தரைமட்டமாகி உள்ளே இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு இறந்தார். விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பேசாம பட்டாசு ஆலைகளை மூடுங்க மக்களுக்கு வேற தொழில் ஏற்பாடு பண்ணுங்க நான் தீபாவளி கொண்டாடுபவன்தான் பட்டாசு வெடிக்க ஆர்வமுள்ளவன்தான் ஆனால் இந்த இழப்புகள் தேவையற்றவை இதனால பயனும் இல்லை