உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ! | Tirupur Banyan Company | Tirupur Incident

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ! | Tirupur Banyan Company | Tirupur Incident

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ! | Tirupur Banyan Company | Tirupur Incident திருப்பூர் வீரபாண்டி அருகே கல்லாங்காடு பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் ஜெகதீஷ். ஆடைகளை உற்பத்தி செய்து ஆன்லைன் மூலமாக விற்று வந்தார். வழக்கம் போல 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்தனர். மதியம் 2 மணி அளவில் திடீரென கம்பனிக்குள் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்ட நிலையில் வேகமாக பரவி துணிகள் கொழுந்து விட்டு எரிய துவங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறினர். கம்பெனி முழுதும் தீ பரவி உள்ளே இருந்த புது ஆடைகள், இயந்திரங்கள் என கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் தான் ஜெகதீஷ் புதிதாக கம்பெனி துவங்கிய நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !