50 ஆண்டு ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு! | Srirangam Aranganathar Temple | Temple Land
50 ஆண்டு ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு! | Srirangam Aranganathar Temple | Temple Land ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வடக்கு கோபுர வாயில் முன்பாக பத்து கடைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இது கோயிலுக்கு சொந்தமான இடம் என புகார் எழும்பியது. இது தொடர்பான வழக்கில் 2023ல் கடைகள் இருந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இன்று அறநிலையத்துறை உதவி ஆணையர் லக்ஷ்மணன் தலைமையில் கோயில் அதிகாரிகள் கடைகளை அகற்ற வந்தனர். கடைகளை அகற்ற அதன் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் 2 மணி நேரம் பொருட்களை எடுத்துக்கொள்ள அவகாசம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை. நாங்கள் இது குறித்து நீதிமன்றம் சென்றுள்ளோம் கடைகளை அகற்றக்கூடாது எனக் கூறினர். தடை உத்தரவு இருந்தால் கொடுங்கள் கடைகளை அப்புறப்படுத்த மாட்டோம். எங்களிடம் கோர்ட் உத்தரவு உள்ளது. பலமுறை அவகாசம் வழங்கி விட்டோம். சென்ற ஆண்டு வந்த போது எழுத்துப்பூர்வமாக அவகாசம் கேட்டீர்கள். ஒரு வருட அவகாசம் கொடுத்து விட்டோம். இன்றுவரை கடையை காலி செய்யவில்லை என அதிகாரிகள் கூறினர். பின் கோயில் ஊழியர்கள் உதவியுடன் கடையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி பொக்லைன் மூலம் கடைகள் இடித்து அகற்றப்பட்டது.