கோவை போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது? | CCTV | Coimbatore Police Station | Investigation
கோவை போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது? | CCTV | Coimbatore Police Station | Investigation கோவை பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷனின் எஸ்ஐ ரூமில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக கோவை போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; நேற்று இரவு 11 மணிக்கு மேல் ஸ்டேஷனுக்குள் ஒரு நபர் ஓடி வந்தார். கான்ஸ்டபிள் செந்தில் அவரை விசாரித்த போது அவர் மனநலம் சரி இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. அவரை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டுள்ளார். பின் இரவில் போலீசாருக்கு தெரியாமல் அந்த நபர் ஸ்டேஷன் முன் பகுதியில் இருந்த படிக்கட்டு வழியாக முதல் மாடிக்கு சென்று உள்ளார். அங்குள்ள எஸ்ஐ ரூமுக்குள் புகுந்து உள் பக்கம் தாளிட்டு கொண்டதாக தெரிகிறது. இன்று காலை போலீசார் பணிக்கு வந்த போலீசார் கதவை திறக்க முயன்ற போது உள்ளே பூட்டி இருந்தது தெரிந்தது. கதவை உடைத்து திறந்து பார்த்த போது அந்த நபர் வேஷ்டியில் தூக்கு மாட்டி இறந்து கிடந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடக்கிறது. முதல் கட்ட விசாரணையில் இறந்தது கோவை, பேரூர் ராமசெட்டி பாளையத்தை சேர்ந்த ராஜன் என்பது தெரிந்தது. அவருக்கு வயது 60. திருமணம் ஆகாதவர். சென்டிரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். சகோதரி மற்றும் தாயாருடன் வசித்து வந்து உள்ளார். 2 நாட்களாக அவரது நடவடிக்கை மற்றும் மன நிலை சரி இல்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரோ கொல்ல வருவது போல் இருப்பதாகவும் சகோதரியிடம் கூறி வந்ததும் தெரிகிறது. புலன் விசாரணை நடந்து வருகிறது என கூறி உள்ளனர். துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் ஸ்டேஷனில் ஆய்வு செய்து விசாரித்தார்.