உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்தின் நடுவே யாத்ரீகர்களை மீட்ட திக் திக் நிமிடங்கள் | Flash flood | Kailash yatra route

வெள்ளத்தின் நடுவே யாத்ரீகர்களை மீட்ட திக் திக் நிமிடங்கள் | Flash flood | Kailash yatra route

வெள்ளத்தின் நடுவே யாத்ரீகர்களை மீட்ட திக் திக் நிமிடங்கள் | Flash flood | Kailash yatra route | Pilgrims rescues | Himachal pradesh | ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. ஜூன் 20ல் பருவமழை தொடங்கியதில் இருந்து, ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுவரை 1,852 கோடி ரூபாய் அளவுக்கு மழை பாதிப்பால் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 36 பேர் வரை காணாமல் போயுள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சிம்லா, சோலன், மண்டி, பிலாஸ்பூர், உனா, ஹமீர்பூர், காங்க்ரா போன்ற இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. மண்டி மாவட்டத்தில் செவ்வாய் மாலை வரை 24 மணி நேரத்தில் 179 மிமீக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுதும் வரும் 10ம் தேதி வரை கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் சந்தீப் குமார் ஷர்மா கூறினார். இந்த சூழலில் கின்னவுர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் டேங்லிங் என்ற இடத்தில் கைலாஷ் யாத்திரை பாதையின் ஒரு பகுதியையே அடித்து சென்றுவிட்டது. இதனால் அந்த வழியாக கைலாஷ் யாத்திரையில் இருந்த யாத்ரீகர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அங்கு நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த இந்தோ - திபெத் பார்டர் போலீஸ் 17வது பட்டாலியன் குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு மூலம் தாண்டும் டிராவர்ஸ் கிராஸ்சிங் முறையில் நீண்ட நேரம் போராடி சுமார் 413 யாத்ரீகர்களை பத்திரமாக மீட்டனர். வெள்ளம் பாதித்த இடங்களில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என கின்னவுர் மாவட்ட அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளதால் 2 மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி