உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு எதிராக மதுரையில் திமுக போஸ்டர் | Vijay | TVK | Vijay Speech | DMK Poster

விஜய்க்கு எதிராக மதுரையில் திமுக போஸ்டர் | Vijay | TVK | Vijay Speech | DMK Poster

விஜய்க்கு எதிராக மதுரையில் திமுக போஸ்டர் | Vijay | TVK | Vijay Speech | DMK Poster | Madurai மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அதில் மத்திய மாநில ஆளுங்கட்சிகளை விமர்சனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். முதல்வர் ஸ்டாலினை அங்கிள், வாட் அங்கிள், வெரி ராங் அங்கிள் என கூறி ஆட்சியில் நடப்பதை விமர்சித்து இருந்தார். இதனை கண்டிக்கும் வகையில் திமுகவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இன்று மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை முழுதும் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் விஜயின் கார்ட்டூன் படத்துடன் வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ அடக்கி வாசிங்க ப்ரோ என்ற வசனங்கள் இடம் பெற்று உள்ளது.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை