உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணர் குளிக்கும் குளத்தின் புனிதத்தை கெடுத்ததாக புகார்

கிருஷ்ணர் குளிக்கும் குளத்தின் புனிதத்தை கெடுத்ததாக புகார்

கிருஷ்ணர் குளிக்கும் குளத்தின் புனிதத்தை கெடுத்ததாக புகார் கேரளாவை சேர்ந்தவர் யூ டியூபர் ஜாஸ்மின் ஜாபர். மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும்கூட. இவர் சமீபத்தில், பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் குளத்தில் கால்களை கழுவி விளையாடி எடுத்த வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸ் ஆக பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரம்பரியமாக சடங்குகளின் ஒன்றாக கிருஷ்ணர் குளிக்கும் இந்த குளம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. போட்டோ, வீடியோ எடுக்கவும், இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி ஜாஸ்மின்ஜாபர் உள்ளே சென்று கோயில் குளத்தின் புனிதத்தை கெடுத்து விட்டதாக கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. யூடியூபரின் இந்த செயல் கோயில் விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாமல், மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக தேவசம் போர்டு கூறியது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஐகோர்ட் கட்டுப்பாடுகளை மீறி, கோயில் குளம் மற்றும் நடப்புரா எனப்படும் வெளிப்புற முற்றம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இடங்களில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு, தெய்வ சடங்கு குளியல் போன்ற புனித சடங்குகளுக்கு குளம் பயன்படுத்தப்படுவதால், மத முக்கியத்துவம் வாய்ந்த குளத்தின் புனிதத்தை அசுத்தம் செய்துவிட்டதாக என தேவசம் போர்டு குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து, குருவாயூர் கோயில் குளத்தை சுத்தம் செய்வதற்காக புண்யாஹம் சடங்கு இன்று தொடங்கப்பட்டது. பிற்பகல் வரை கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு குளத்தின் புனித தன்மை மீட்க பரிகார பூஜை நடத்தப்பட்டது. பதினெட்டு பூஜைகள், பதினெட்டு ஸ்ரீவேலிகள் திட்டமிடப்பட்டு 6 நாள்கள் பரிகார பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. எதிர்ப்புகள் எழுந்ததால், ஜாஸ்மின் ஜாபர் அந்த வீடியோக்களை நீக்கிவிட்டார். கட்டுப்பாடுகள் இருப்பது தெரியாமல் தவறு செய்துவிட்டேன் அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அவர் கூறியுள்ளார்.

ஆக 26, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath
ஆக 26, 2025 17:44

யாரோ ஒரு நாய்க்கு பணம் கொடுத்து எடுக்க பட்டு இருக்கிறது குறைந்தது 5 பேர் கும்பல் ஒரு குழு போலீஸ்க்கு தெரியாமல் ஷூட்டிங் எடுத்தார்களா? மத கலவரத்தை உருவாக்க ஒரு முயற்சியாகவும் இருக்கலாம்.போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தெரியும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை