உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மியூசியத்தின் பொக்கிஷங்களுடன் பைக்கில் தப்பிய கொள்ளையர்கள் Napoleonian |jewels |stolen|paris|

மியூசியத்தின் பொக்கிஷங்களுடன் பைக்கில் தப்பிய கொள்ளையர்கள் Napoleonian |jewels |stolen|paris|

மியூசியத்தின் பொக்கிஷங்களுடன் பைக்கில் தப்பிய கொள்ளையர்கள் Napoleonian |jewels |stolen|paris| பிரான்ஸ் தலைநர் பாரிஸில் உள்ள லூவ்ரே மியூசியம், உலகின் மிகப்பெரிய அருங்காட்சியம். சுமார் 73 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 1546ல் பிரான்ஸ் அரச குடும்பத்துக்கான அரண்மனை இங்கு கட்டப்பட்டது. மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் இங்கு முதன் முதலில் குடியிருந்தார். கலை ஆர்வலரான அவர் தனக்கு பிடித்த கலைப் பொருள்களை அரண்மனையில் சேகரித்து வைத்தார். பின்னாளில் வந்த மன்னர்களும் அதை பின்பற்றினர். 1789ல் பிரெஞ்சு புரட்சி நடக்கும் வரை இது தனிப்பட்ட சொத்தாகவே இருந்தது. அதன் பிறகு 1793ல் இது லூவ்ரே என்ற பெயரில் மியூசியம் ஆனது. இங்கு தற்போது சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளன. உலக புகழ் பெற்ற ஓவியர் லியோனர்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனலிசா ஓவியமும் இங்குதான் உள்ளது. தினமும் 30 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இங்குள்ள அப்பல்லோ கேலரியில் மன்னர்களின் மகுடங்கள், நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில மர்ம நபர்கள், அப்பல்லோ கேலரிக்குள் புகுந்து, மன்னர் நெப்போலியன் அணிந்த நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பில்லாத பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். ஹைட்ராலிக் ஏணியை goods lift பயன்படுத்தி மேலே சென்ற கொள்ளையர்கள், கண்ணாடியை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். என்னென்ன நகைகள் கொள்ளை போனது என்பது பற்றி கணக்கெடுப்பு நடப்பதாக பிரான்ஸ் கலாசார அமைச்சர் ரஷிதா டடி கூறினார். கொள்ளை சம்பவத்தையொட்டி மியூசியத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ