உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நியூசியில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு | Newzeland | Referundum | Khalistan supporters

நியூசியில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு | Newzeland | Referundum | Khalistan supporters

இந்தியாவில் சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையை ஆதரித்து காலிஸ்தான் பிரிவினை இயக்கங்கள் செயல்பட்டன. அந்த இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காலிஸ்தான் நாடு கோரும் சீக்கியர்கள் வெளிநாடுகளில் நீதி கோரும் சீக்கியர்கள் Siksh for Justice என்ற அமைப்பை உருவாக்கி, காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். லண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் தனி நாடு கோரிக்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அந்த வரிசையில் நேற்று நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாந்து Auckland நகரில் பொது வாக்கெடுப்பு நடத்தினர். நியூசிலாந்தில் வாழும் இந்திய சமூகம் இந்த பொதுவாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். நியூசிலாந்தின் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு மதிப்பளிக்காதவர்களை நிராகரிப்பதில் இந்திய சமூகம் ஒன்றுபட்டு நிற்கும் என நியூசிலாந்து - இந்திய சென்ட்ரல் அசோசியேஷன் தலைவர் நரேந்திர பனா Narendra Bhana தெரிவித்தார். நியூசிலாந்து நாட்டின் கருத்து சுதந்திர கொள்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த அனுமதி தரப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நியூசிலாந்து மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம் உள்ள சீக்கியர்கள், காலிஸ்தான் பிரச்னையில் பிளவுபட்டுள்ளனர். நீதி கோரும் சீக்கியர்கள் அமைப்பினர் முன்வைக்கும் காரணங்களை ஆதரித்தாலும், உள்ளூரைச் சேர்ந்த சீக்கிய அமைப்புகள் இதிலிருந்து விலகி இருக்கின்றன. நியூசிலாந்தில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 37 ஆயிரம் வாக்குகள் பதிவானதாக நீதி கோரும் சீக்கியர்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினரும், காலிஸ்தான் கவுன்சில் தலைவருமான டாக்டர் பக் ஷிஷ் சிங் சந்து Dr. Bakhshish Singh Sandhu கூறினார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ