உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து கேரள சிறுவன் மரணம் | Nilgiris heavy rain | Red alert | Ooty | Tree

ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து கேரள சிறுவன் மரணம் | Nilgiris heavy rain | Red alert | Ooty | Tree

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதலே நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுகின்றன. கேரளாவின் கள்ளிக்கோட்டையில் இருந்து 14 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள அதிக மரங்களை கொண்ட இடமான ட்ரீ பார்க் பகுதியில் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரசித் - ரேகா தம்பதியின் 15 வயது மகன் ஆதிதேவ் தலையில் திடீரென மரம் முறிந்து விழுந்தது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை