பீகார் திட்டங்களுக்கு கூடுதல் கவனிப்பு Nirmala Sitharaman |2025-26 Budget| Bihar|Schemes
மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்கானா எனப்படும் தாமரை விதைகளுக்கு சர்வதேச அளவில் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. தாமரை விதைக்கான சந்தையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பீகாரில் தாமரை விதை வாரியம் அமைக்கப்பட உள்ளது. தாமரை விதைகளின் உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் முதலானவற்றில் தாமரை விதை வாரியம் ஈடுபடும். பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதலுக்கான தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்படும். இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். பீகாரில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். தலைநகர் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பாட்னா விமான நிலையம் விரிவாக்கப்படும்.