கலெக்டரிடமே கைலாசா ரூட்டு கேட்டு கதறிய ஊர் மக்கள்-பரபரப்பு Nithyananda kailasa country | Puducherry
இதுக்கு மேல இங்க வாழ முடியாது நித்தியின் கைலாசா தான் நிம்மதி எப்டியாது அனுப்பி வைங்க கலெக்டரிடம் ஊரே கதறல் புதுச்சேரியின் அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளத்தில் அரசு நிலத்தில் வசித்து வரும் குடும்பத்தினர், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு கொடுத்தனர். பட்டா தராவிட்டால் எங்களுக்கு குடியுரிமை வேண்டாம் என்று ஆவேசமாக பேசினர். தங்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர். சொந்த ஊரில் வாழ விடாவிட்டால், தயவு செய்து நித்தியானந்தா இருக்கும் கைலாசாவுக்கு எங்களை அனுப்பி வைத்து விடுங்கள் என்று நேரடியாக கலெக்டரிடமே ஆதங்கத்தை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.