கோயில் நிதியில் கற்பனை செய்ய முடியாத ஊழல் | NTK | Seeman | HRCE
தமிழக அறநிலையத்துறை பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறியுள்ளது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபட திறக்காவிட்டால், கோயில் நுழைவு போராட்டத்தை முன்னெடுப்போம் என நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தோம். நாங்கள் அறிவித்த ஒரே வாரத்தில் கோயில் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். அத்துடன் கோயில் திறக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். கோயிலை அரசு திறக்கவிருப்பது எங்களுக்கு தெரியுமானால், நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும் வரை, ஏன் கோயிலை திறப்பதாக அறிவிக்கவில்லை. கோயில் நிலம் எனக்கூறி, ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளை பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள, பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்காதது ஏன்?