எதிர்கட்சி எம்.பிக்கள் செயலால் சபாநாயகர் ஆவேசம் Om Birla warned opposition MP'S| Lok Sabha adjourne
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இப்போது நடக்கிறது. புதிய கல்வி கொள்கை, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உட்பட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவையிலும் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் திமுக எம்பிக்கள் செய்த ரகளையால் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா டென்ஷன் ஆனார். சபாநாயகர் சொல்ல சொல்ல கேட்காமல், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்களை சபைக்குள் அணிந்து சென்ற திமுக எம்பிக்களை ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தார். சபைக்குள் இதுபோன்ற உடை அணிந்து வர அனுமதி இல்லை என எச்சரித்தார். எப்போதும் பொறுமையாக சிரித்த முகத்துடன் சபையை வழிநடத்தும் ஓம் பிர்லா, திமுக எம்பிக்களின் செயலால் கொதிப்படைந்தார். அவர்களில் சில எம்பிக்களின் பெயரை குறிப்பிட்டு கோபத்துடன் நேரடியாக கண்டித்தார். இந்நிலையில், மேற்கு வங்க வாக்காளர்களின் அடையாள அட்டை எண்ணும், பிற மாநிலங்களில் உள்ள அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பதாகக் கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று சபையில் அமளியில் ஈடுபட்டனர்.