இவ்ளோ வரி கட்ட முடியாது; ஆம்னி பஸ் ஓனர்கள் ஸ்டிரைக் omni bus strike| omni bus owners association| om
தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன் விபரம்; தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற 30க்கு மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கு அந்த மாநில போக்குவரத்து துறை 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதே போல் கர்நாடகாவும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கு மேற்பட்ட பஸ்களுக்கு 1.15 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்தது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மத்திய அரசின் ஆல் இந்திய டூரிஸ்ட் பெர்மிட் படி, தமிழகத்தில் வெளி மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதனால் நாங்களும் வசூலிக்கிறோம் என்கிறார்கள். ஆம்னி பஸ்களுக்கு காலாண்டுக்கு தமிழக சாலை வரி ஒன்றரை லட்சம் ரூபாய்; ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி 90 ஆயிரம்; கேரளா கர்நாடகா சாலை வரி 2 லட்சம் என காலாண்டுக்கு மொத்தம் நான்கரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அது முடியாததால், 10ம் தேதி மாலை 5 மணி முதல் தமிழகம் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் இடையே ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழக முதல்வர் அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரியில் விலக்கு அளித்து பஸ்கள் இயக்க வழிவகை செய்ய வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். #OmniBusStrike #OmniBusOwners #BusAssociation #OmniBusesStopsService| #NoBusServiceToKeralaKarnataka