காசு வாங்கிட்டயா? போலீசை சாடிய கடை ஓனர் | Encroachment | OMR Road Encroachment
சென்னை ஓஎம்ஆர் ரோடு, சோழிங்கநல்லூர், கரப்பாக்கம் பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து பிரியாணி கடைகள், தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வந்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் ஓஎம்ஆர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். பலமுறை எடுக்க சொல்லியும் தொடர்ந்து செயல்பட்டு வந்த கடைகளை செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர். போலீசார் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு சென்ற பிறகு தால் மீண்டும் அதே இடத்தில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டது. தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் கடையை உடனடியாக எடுக்குமாறு கூறினர், ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், மற்ற கடைகளில் லஞ்சம் வாங்குறீங்களா என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.