உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ நிர்வாகிகளுக்கு டெல்லியில் 'கிளாஸ்'

பாஜ நிர்வாகிகளுக்கு டெல்லியில் 'கிளாஸ்'

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கிறது மத்திய அரசு. இதற்காக, கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் 2 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மசோதாக்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டுவிடக்கூாடது என்பதில் பாஜவினர் உறுதியாக உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகள் மூலம் மக்களிடம் தீவிரமாக எடுத்து சொல்ல பாஜ மேலிடம் முடிவுசெய்துள்ளது. இதற்காக, மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கும் கூட்டங்கள் டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. களத்தில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கிவருகின்றனர். வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு இருந்தபோதும், கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் அந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜ திட்டமிட்டுள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை