மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்! Ooty | Kodaikanal | Vehicle Restrictions
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில், கோடை காலங்களில் வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மார்ச் 14ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 1 முதல், ஜூன் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்துக்குள் வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலை பொறுத்தவரை வார நாட்களில், 4,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரியகாந்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான தரவுகள் இல்லாமல் இருந்ததை நீதிபதிள் சுட்டிக்காட்டினர். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்து உள்ளது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதே கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட, மனுதாரர் அனுமதி கேட்டபோது, அதற்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.