3 அரசு துறைகளுக்கு மூடு விழா நடத்தும் அரசாணையை திரும்ப பெறுங்கள் | O.Panneerselvam | Ex CM | Hits ha
வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக அரசு, அனைத்திலும் படுதோல்வியடைந்து தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மகளிர் இரு சக்கர வாகன மானியம், மடிக்கணினி என பல்வேறு திட்டங்களை ஏற்கனவே இந்த திமுக அரசு முடக்கிவிட்டது. இப்போது அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து, 3 துறைகளுக்கு மூடு விழா நடத்தி இருக்கிறது. இது பொதுமக்களிடையே குறிப்பாக அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம், அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம், காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தனர்