எம்பிக்கள் பயணம் பாகிஸ்தான் மீதான நிலைப்பாட்டை மாற்றியது: சசி தரூர் டபுள் ஹேப்பி! Operation Sindhoor
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். சுற்றுப் பயணம் முடித்து நாடு திரும்பிய சசி தரூர், தங்கள் அனுபவம் மற்றும் சுற்றுப் பயணத்தின் பலன் குறித்து விளக்கினார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது: நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக, கொலம்பியா நாட்டில் எங்கள் குழு செய்த செயல் குறிப்பிடத்தக்கது. நம் எம்பிக்கள் குழு அங்கு செல்லும் வரை, பாகிஸ்தான் மீதான அவர்களின் நிலைப்பாடு வேறாக இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் தரப்பில் பலியானோருக்கு அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.