உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்து சக்சஸ்: இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் மீட்பு Iran - Israel War| Operation Sindhu| In

ஆபரேஷன் சிந்து சக்சஸ்: இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் மீட்பு Iran - Israel War| Operation Sindhu| In

இஸ்ரேலில் இருந்து தப்பும்போது விமானம் அருகே பறந்த மிசைல்கள் மிரண்டுபோன இந்தியர்கள் நடுவானில் திகில் அனுபவம் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்கதலில் ஈடுபட்டன. போர் பதற்றம் அதிகரித்ததால், ஏற்கனவே ஈரானில் இருந்த இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. அதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் வழியாக, விமானம் மூலம் 161 இந்தியர்கள் பத்திரமாக டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று அதிகாலை டில்லி வந்தடைந்த இந்தியர்களை வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கிரிட்டா வரவேற்றார்.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி