ஆபரேஷன் சிந்தூர் தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்தவர் கைது Navy Staff |Arrested |for sharing infos| I
ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள புன்ஸிகா கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் யாதவ். டில்லி கடற்படை தலைமை அலுவலகத்தில் மேல் நிலை எழுத்தராக பணியாற்றுகிறார். இவர் கடற்படை மற்றும் பிற ராணுவ படைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் பெண் ஏஜென்ட் உடன் அவருக்கு தொடர்பு இருந்ததை உறுதி செய்து விஷால் யாதவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இது குறித்து ராஜஸ்தான் போலீஸ் உளவுப் பிரிவு ஐஜி விஷ்ணுகாந்த் குப்தா கூறும்போது, பிரியா ஷர்மா என்ற புனை பெயரில் பாகிஸ்தானின் உளவு பிரிவு பெண், விஷால் யாதவுடன் தொடர்பில் இருந்துள்ளார். விஷால் யாதவிடம் இருந்து இந்திய ராணுவ தகவல்களை அந்த பெண் பெற்றுள்ளார். அதற்காக விஷால் யாதவ் அந்தப் பெண்ணிடம் இருந்து தனது வங்கி கணக்கு மூலம் பணம் பெற்று வந்துள்ளார். விஷால் யாதவ் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். அதற்கான பணத் தேவைக்காக ராணுவ தகவல்களை அவர் பிரியா ஷர்மாவுக்கு தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நடந்துகொண்டிருந்த சமயத்திலும் அவர் ராணுவ தகவல்களை அளித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக விஷால் யாதவுக்கு மேலும் யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என உளவுப் பிரிவு ஐஜி விஷ்ணுகாந்த் கூறினார்.