ஹெல்மெட் அணியாததால் புத்தாண்டில் நிகழ்ந்த துயரம்
விழுப்புரத்தில் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். வயது 19. பெயின்டராக பணியாற்றி வந்தார். கடந்த 31ம் தேதி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே தவறி விழுந்தார். பிரேம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் கதறி அழுதனர். அந்த துக்கத்திலும், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கனத்த இதயத்துடன் அவர்கள் சம்மதித்தனர். மகன் திரும்பி வரப்போவதில்லை; அவரது உறுப்புகள் மூலமாவது பிறருக்கு வாழ்வளிக்க நினைத்து இந்த முடிவு எடுத்தனர். மகனின் இந்த நிலைக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றததுதான் காரணம் என அவரது தந்தை சோகத்துடன் சொன்னார்.