பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தர துடிக்கும் இந்தியா | PahalgamAttack
காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் பகுதியை சுற்றி பார்க்க சென்ற டூரிட்ஸ்ட்கள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது. சிந்து நிதி நீர் ஒப்பந்தம் ரத்து; எல்லையை மூடுவது; பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது என இந்தியா நடவடிக்கை எடுத்தது. பதிலுக்கு தங்கள் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. சிம்லா ஒப்பந்ததை முடிவுக்கு கொண்டுவருவதாக சொன்னது. இந்த நடவடிக்கைகளை தாண்டி, இரு நாடுகள் இடையேயும் போர் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. எல்லையில் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அரபிக்கடலில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்குபதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை அரபிக்கடலில் நிறுத்தி உள்ளது. இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தானை மிரள செய்தது. போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க ஐக்கியநாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.