பாகிஸ்தானுக்கு போர் விமான இன்ஜினா? அதிகாரிகள் விளக்கம் | Pak | Russia | PM Modi| aircraft 'JF-17
வரும் டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வர உள்ளார். அப்போது இரு நாடுகள் இடையே உயர்மட்ட பேச்சு நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில் இருநாட்டுக்கு இடையேயான நட்புறவை கெடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு படையில் சீன தயாரிப்பு போர் விமானமான ஜே.எப். - 17 தண்டர் பிளாக் 3 ஜெட் விமானங்களுக்கு, ரஷ்யாவின் ஆர்.டி., - 93 எம்.ஏ. இன்ஜின்களை வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதை ரஷ்ய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாகிஸ்தானுடன் எந்த ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என அவர்கள் கூறினர். சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் இந்தியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகளிடம் தாமாக முன்வந்து நட்பு வைத்துக்கொள்வது போல பாசாங்கு வேலையை பாகிஸ்தான் செய்து வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் சமீபத்தில் செய்து கொண்டது. இதைத் தொடர்ந்து இந்தியா - ரஷ்யா இடையே காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இப்படி ஒரு தகவலை கசிய விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.