/ தினமலர் டிவி
/ பொது
/ ஆப்கனுடன் போர் துவங்கியது பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan announces 'open war' with Afghanistan
ஆப்கனுடன் போர் துவங்கியது பாகிஸ்தான் அறிவிப்பு | Pakistan announces 'open war' with Afghanistan
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. ஆப்கனில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் தாக்குதலை நடத்துகின்றன. இதனால் ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழிக்கிறது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். பயங்கரவாதிகள் மட்டுமல்ல அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
பிப் 27, 2026