அப்பாவி மக்களை பொசுக்கிய பாக் ராணுவம் | Pakistan Military | Pakistan Army
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளோடு சேர்ந்து, பலூச் விடுதலை ராணுவமும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இருந்தும் மற்ற நாடுகளில் உள்ளது போல வலுவான உளவு அமைப்பு பாகிஸ்தானிடம் இல்லை. அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தரும் தகவல்கள் அடிக்கடி சொதப்பி விடுகிறது. சமீபத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்கள், ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தப்பட்ட சம்பவம் இதற்கு உதாரணம். இப்போது மீண்டும் அதே போல ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது. அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கட்லாங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
மார் 30, 2025