பிணை கைதிகளை மீட்க இதுவே கடைசி வாய்ப்பு என அறிக்கை | Pakistan train hijack | BLA | Balochistan liber
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இருந்து நேற்று கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர் நகருக்கு 9 பெட்டிகளில் 450 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. பாலோன் மாவட்டத்தில் மலை குன்றுகளுக்கு நடுவே மஷ்காப் சுரங்கப்பாதை வழியாக சென்ற ரயில் மீது பலூச் விடுதலை படை எனும் பிஎல்ஏ கிளர்ச்சி படையினர் குண்டு வீசி ஹைஜாக் செய்தனர். முன்னதாக ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். 6 பேர் கொல்லப்பட்டனர். ரயிலில் பயணித்த பலூசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகளை அவர்களே விடுவித்தனர். பாகிஸ்தான் படை வீரர்கள், அவர்களின் விரோத மாகாணங்களை சேர்ந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பிணைக்கைதிகளில் சில பயணிகளை மனித வெடிகுண்டுகளாக வைத்துள்ளதாக கிடைத்த தகவலால் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 48 நேரத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள அவர்களது அமைப்பை சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்யாவிட்டால் பிணைக்கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சுட்டுக்கொன்று விடுவோம் என்று பிஎல்ஏ கிளர்ச்சி படையினர் மிரட்டல் விடுத்து பாகிஸ்தானையே பரபரப்பாக்கினர்.