உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் ராணுவத்தை அலறவிட்ட தலிபான் குண்டு pakistan vs TTP | pakistan taliban attack | ind vs pak

பாகிஸ்தான் ராணுவத்தை அலறவிட்ட தலிபான் குண்டு pakistan vs TTP | pakistan taliban attack | ind vs pak

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா Khyber Pakhtunkhwa மாகாணம் வடக்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ வாகனங்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. திடீரென சரக்கு வாகனம் ஒன்று வந்து, ராணுவ வாகனங்கள் மீது மோதியது. அப்போது தான் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ராணுவ வாகனங்கள் சிதறின. பக்கத்தில் இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அப்பாவி மக்கள் 19 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரும் இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை படை தாக்குதல் என்பது தெரிந்தது. இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பஹதூர் அமைப்பின் தற்கொலை படை பிரிவு பொறுப்பேற்றது. இது தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான்களின் ஒரு கிளை பிரிவாகும். தற்கொலை படையாக சென்றவர் சரக்கு வாகனங்கள் முழுதும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு, ராணுவ கான்வாய் மீது மோதி வெடிக்க வைத்தார். இதில் தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 13 வீரர்கள் இறந்ததோடு, காயம் அடைந்த 10 வீரர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் எப்படி பலூச் விடுதலை ராணுவம் பெரிய தலைவலியாக இருக்கிறதோ, அதே போல் மேற்கு எல்லை முழுதும் பாகிஸ்தான் தலிபான்களின் ஆதிக்கம் பாகிஸ்தான் அரசின் நிம்மதியை கெடுக்கிறது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை