உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலில் அப்படி என்ன தான் இருக்கு? Palace on Wheels | Train season begins | Delhi |

பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலில் அப்படி என்ன தான் இருக்கு? Palace on Wheels | Train season begins | Delhi |

சொக்க வைக்கும் சொகுசு ரயில் டிக்கெட் எவ்ளோ தெரியுமா? வீல் மேல அரண்மனை என்னென்ன வசதிகள் டில்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து, உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய ரயில்களில் ஒன்றான பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரயில், இந்த ஆண்டின் பயணத்தை துவங்கியது. இதில் பயணிக்க 32 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து ஐந்து பேர், ஸ்பெயினிலிருந்து இரண்டு பேர், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை, உக்ரைன், போலந்திலிருந்து தலா ஒருவர் மற்றும் இந்தியாவிலிருந்து 12 பேர் பயணிக்கின்றனர். ராஜஸ்தான் சுற்றுலா மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் சுஷ்மா அரோரா, செயல் இயக்குநர் ராஜேந்திர சிங் ஷெகாவத், ரயிலை இயக்கும் தனியார் நிறுவனமான O&M நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பகத் சிங் மற்றும் இயக்குநர் பிரதீப் போரா பயணத்தை துவக்கி வைத்தனர். முன்பதிவு செய்தவர்கள் டில்லி விமான நிலையத்திலிருந்து சொகுசு காரில் அழைத்து வரப்பட்டு 7 ஸ்டார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தினர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு, மாலை மரியாதைகள் செய்யப்பட்டு, பின்னர் ராஜஸ்தான் கலாச்சாரப்படி அவர்களை கவுரவித்து அரண்மனை ரயிலுக்குள் அழைத்துச் சென்றனர். வரவேற்பு பானம் வழங்கப்பட்டு அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ரயிலின் உள்ளே அரண்மனையில் தங்குவது போல் செட் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டைனிங் ஹால், குளியலறை வசதி, புத்தகம் படிப்பதற்கான டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கும் அறைக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் உணவகங்கள், பார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். அவர்களை அழைக்க மாளிகைக்குள் காலிங் பெல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு முதல்முதலில் இந்த ரயில் பயணம் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரயிலில் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு அரண்மனை போலவே செட் செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு நாட்டினரும் இதில் பயணிக்க விரும்புவர்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி