சட்டம் ஒழுங்கு காக்கும் ஆட்சி இதுதானா?: பழனிசாமி SIPCOT | Ranipet | Police Station| ADMK GS Palanisa
ராணிப்பேட்டையில் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். தீயை போலீசார் அணைத்தனர். யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொது செயலாளர் பழனிசாமி கூறி உள்ளார். போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும், ஒரு ADGP தம்மை கொலை செய்யும் நோக்கத்தில் தமது அலுவலகம் தீக்கிரை ஆக்கப்பட்டதாக சொல்வதும் தான், சட்டம் ஒழுங்கை காக்கும் ஆட்சியா? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.