பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பழனிசாமி கண்டனம் palanisamy| stalin| dmk| admk| anna university crime
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழகம் குற்ற பூமியாக மாறிவிட்டது. போதை பொருள் கடத்தல் முதல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளில் பலர் திமுவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற திமுக அரசு முயற்சிப்பது கொடுமையானது. ஆட்சியாளர்கள் துணையோடு தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு இருப்பதால் குற்ற செயல்கள் பெருகி வருவது அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவை சேர்ந்த நிர்வாகி என செய்திகள் வந்த நிலையில், அவருடன் பேசிய அந்த சார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மை குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு உறுதி அளிக்காமல், சில அமைச்சர்கள் அதிமுகவுக்கு பதில் அளிப்பதையே கடமையாக கொண்டுள்ளனர். திமுக ஆட்சி இருக்கும் வரை பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.