தந்தை, தாய், மகன் கொடூரமாக சாய்க்கப்பட்ட வழக்கில் திருப்பம் | Palladam murder case
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, வயது 78. விவசாயி. இவரது மனைவி அலமேலு வயது 73. இவர்களின் 46 வயது மகன் செந்தில்குமார், கோவை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால் அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தாய், தந்தையை அழைத்துச் செல்ல செந்தில்குமார் கடந்த நவம்பர் 28ம் தேதி இரவு சேமலைக்கவுண்டன்பாளையம் வந்திருந்தார். 29ம் தேதி காலை தோட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் பார்த்தபோது, தெய்வசிகாமணி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வெளியே உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அலமேலுவும், மகன் செந்தில்குமாரும் வீட்டுக்குள் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடிய தெய்வசிகாமணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் இறந்தார்.