பல்லாவரத்தில் விஷமான குடிநீர்? திமுக அமைச்சர் செயலால் ஷாக் Pallavaram issue | Tha Mo Anbarasn | DMK
பல்லாவரத்தில் உச்சக்கட்ட பீதி அடுத்தடுத்து பறிபோன 2 உயிர் இன்னும் 28 பேர் கதி என்ன? தாம்பரம் மாநகராட்சி பல்லாவரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, நாகரத்தினம் தெரு பகுதியை சேர்ந்த மக்கள் பலருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்களில் 30 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றனர். திருவேதி என்ற 54 வயது நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவரும் இறந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாநகராட்சி விநியோகம் செய்த தண்ணீரில் கழிவுநீர் கலந்ததாகவும், அதை குடித்ததால் தான் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டதாகவும் பல்லாவரம் பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் தாமோ அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.