/ தினமலர் டிவி
/ பொது
/ நீலகிரி பள்ளியில் பீறிட்டு அழுத ஆசிரியர்கள், மாணவிகள்! Pandhalur |Nilgiris| Landslide | 4th std girl
நீலகிரி பள்ளியில் பீறிட்டு அழுத ஆசிரியர்கள், மாணவிகள்! Pandhalur |Nilgiris| Landslide | 4th std girl
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கோட்டூரில் வசிக்கும் சாமிதாசின் 9 வயது மகள் அனந்திகா. பந்தலூர் அருகே மராடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாயை இழந்த மகளை பார்த்துக் கொள்ள முடியாமல் தவித்த சாமிதாஸ் 2 மாதம் முன்பு மகளுக்கு டி.சி. வாங்கிக்கொண்டு வயநாடு சூரல்மலையில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டுபோய்விட்டார். அங்கு அரசு பள்ளி ஒன்றில் மீண்டும் 4-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். நிலச் சரிவில் சாமிதாஸ் மாமியார் குடும்பமே மண்ணில் புதைந்தது. மகளின் முகத்தை கூட பார்க்க முடியாமல் சாமிதாஸ் கலங்கி நின்றார்.
ஆக 05, 2024