இப்போ இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ்: மோடி தடாலடி | Modi | Rahul | Congress
பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாக தெரிகிறது. ஏழைகளின் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதுக்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். எதிர்க்கட்சி வரிசையில் அமர தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் நம்பிக்கையை இழந்தனர். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு 10 முறை லோக்சபா தேர்தல் நடந்துள்ளது. ஒருமுறை கூட காங்கிரஸ் கட்சியால் 250 என்ற எண்ணிக்கையை தொட முடியவில்லை.
ஜூலை 02, 2024