/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேச இளைஞர்களை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டு petition|bangladesh|highcourt|seeking ban|Indian tv
வங்கதேச இளைஞர்களை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டு petition|bangladesh|highcourt|seeking ban|Indian tv
வங்கதேசத்தில் கலவரம் வெடித்ததால் கடந்த ஆகஸ்ட் 5ல் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்து தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு யூனுஸ் முகமது தலைமையில் வங்க தேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்தது முதல் வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது அந்நாட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்குமான உறவில் விரிசல் உண்டானது. இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மய் கிருஷ்ண தாஸ் மீதான தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பாதித்தது.
டிச 03, 2024