/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெய்ப்பூர் பெட்ரோல் பங்க் தீயில் சிக்கியவர்கள் கதி என்ன? | Petrol pump fire | vehicles damaged
ஜெய்ப்பூர் பெட்ரோல் பங்க் தீயில் சிக்கியவர்கள் கதி என்ன? | Petrol pump fire | vehicles damaged
வெடித்து சிதறிய டேங்கர் பற்றி எரிந்த வாகனங்கள் அதிகாலையில் பயங்கரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அஜ்மீர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு சிஎன்ஜி டேங்கர், லாரி, டிரக் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை அந்த வழியாக வந்த டிட்ரக் ஒன்று எதிர்பாராத விதமாக, சிஎன்ஜி டேங்கர் மீது மோத, அடுத்தடுத்த நிறுத்தியிருந்த வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் ஏற்பட்ட தீயால், சிஎன்ஜி டேங்கர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. பெரும் தீ பரவியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டிச 20, 2024