உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம், கேரளாவில் பயங்கரவாத சதி? PFI பின்னணியில் பகீர் | PFI Investigation | Foreign Funding

தமிழகம், கேரளாவில் பயங்கரவாத சதி? PFI பின்னணியில் பகீர் | PFI Investigation | Foreign Funding

இந்தியாவில் PFI எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். PFI எ அமைப்பின் மூலம் ஹவாலா போன்ற வழிகளில் திரட்டப்பட்ட, 131 கோடி ரூபாய் நிதி, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிதியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி, பி.எப்.ஐ., அமைப்பின் கீழ் சொத்துகளை சேர்த்தனர். இதற்கிடையே, இந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு கடந்த 2022ல் மத்திய அரசு தடை விதித்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில போலீசாரால் தனித்தனியே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டது குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பினாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு வெளிநாட்டு நிதி பெறப்பட்டது அமலாக்கதுறை விசாரணையில் தெரியவந்துள்ளது, இது குறித்து அமலாக்கதுறை தரப்பில் வெளியான தகவல், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், ரகசிய செயற்பாட்டாளர்கள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டி உள்ளனர். சதி திட்டம் தீட்டவும், பயங்கரவாத செயலுக்கும் நிதி திரட்டியது தெரியவந்தது. பி.எப்.ஐ.,யின் அரசியல் அமைப்பு தான், எஸ்.டி.பி.ஐ., என்பதும், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்த ரகசிய டைரியையும், பறிமுதல் செய்துள்ளோம். எஸ்.டி.பி.ஐ., அமைப்புக்கு வேட்பாளர் தேர்வு, பொது நிகழ்ச்சிகளை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கைக்கு, பி.எப்.ஐ., தான் பணம் கொடுத்து உள்ளது. இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து, சமூக சேவைக்கு என, பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பி.எப்.ஐ., சொத்துக்கள் பெரும்பாலும் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், சிமி என்ற ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில், உடற்பயிற்சி கூடங்கள் என்ற பெயரில் ஆயுத பயிற்சியும், தாக்குதல் நடத்துவற்கான பயிற்சிகளும் அளித்துள்ளனர். இவர்கள், கேரள மாநிலத்தில் நடத்தி வந்த எட்டு அறக்கட்டளைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன; 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. தொடர் விசாரணையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள், தமிழகத்திலும் பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி, பயங்கரவாத செயலுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே கைதான பி.எப்.ஐ., நிர்வாகிகள், 28 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இலவச கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தருவதுபோல முகாம்கள் நடத்தி, அதை ஆவணப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி, பணம் பெற்று உள்ளனர் என தெரியவந்துள்ளது. #PFI #EnforcementDirectorate #BenamiTrusts #ForeignFunding #TerrorismLinks #SDPI #KeralaAssets #TamilNaduProbe #AntiTerrorFunding #EDRaid

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை