தீவிரவாதிகளுக்கு காங் கரிசனம்: புட்டு வைத்த பியூஷ் கோயல் | Tahawwur Rana | Piyush Goyal
மும்பை தாக்குதல தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்கள் அஜ்மல் கசாப்புக்கு பிரியாணி வழங்கினர். ஆனால் மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். மும்பை மக்கள் மோடிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சியை விட சமாதான அரசியலில் ஈடுபட்டுள்ளது. இண்டி கூட்டணியால் சமாதான அரசியலைத் தாண்டி சிந்திக்க முடியாது. அவர்களிடம் பிரதமர் மோடியைப் போல நேர்மறை சிந்தனை இல்லை என பியூஷ் கோயல் கூறினார்.