விமானம் - ஹெலிகாப்டர் மோதல்: 67 பேர் நிலை என்ன? | Plane crash | Plan - Helicopter collision | Reagan
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்ள ரோனால்ட் ரீகன் ஏர்போர்ட்டில் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் இடைவெளியில் பயணிகள் விமானம் ஒன்று ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி நொறுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை, பிஎஸ்ஏ என்ற மற்றொரு சிறிய நிறுவனம் இயக்கி வந்துள்ளது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள கான்ஸாஸ்(Kansas) மாகாணத்தில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்களுடன் வாஷிங்டன் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக பிளாக் ஷாக் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் இரண்டும் வெடித்து சிதறி அங்கிருந்த போடோமாக்(Potomac) நதியில் விழுந்தன. விமானமும், ஹெலிகாப்டரும் மோதி தீப்பிழம்புடன் நதியில் விழும் காட்சிகள் வெளியாகி உள்ளன