பிரான்சில் இருந்து பிரதமர் மோடி வெளியிட்டு பதிவு | PM Modi | Greetings | Thaipusam fest | Murugan t
தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முருகன் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தைப்பூசம் கொண்டாடும் பக்தர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூச திருநாள் வாழ்த்துகள்! முருக பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்த புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயல் ஊக்கத்தையும் கொண்டு வரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் மோடி பதிவிட்டுள்ளார்.