உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதான் மோடி டைமிங்! காங் கதை கந்தல் | PM Modi attack Cong | Karnataka congress issue | shakti scheme

இதான் மோடி டைமிங்! காங் கதை கந்தல் | PM Modi attack Cong | Karnataka congress issue | shakti scheme

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளி தெளித்தது. அதில் ஒன்று சக்தி திட்டம். தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா நிறைவேற்றினார். அதன்படி கர்நாடக அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். காங்கிரசை வெல்ல வைத்த இதே திட்டம் இப்போது அந்த கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. சக்தி திட்டத்தால் அரசுக்கு பெரிய அளவில் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. மற்ற வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை. இதை மனதில் வைத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் சிவகுமார் அந்த திட்டத்தை நிறுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக சொன்னார். டிக்கெட் எடுக்க எங்களிடம் பொருளாதார வசதி இருக்கிறது. இலவச டிக்கெட் வேண்டாம் என்று பல மாணவியர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே சக்தி திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை